விநியோகச் சங்கிலி மாற்றங்கள்: சிங்கப்பூர் உட்பட ஆறு ஆசியான் நாடுகளில் கூடுதல் முதலீடு

விநியோகச் சங்கிலி மாற்றங்கள்: சிங்கப்பூர் உட்பட ஆறு ஆசியான் நாடுகளில் கூடுதல் முதலீடு

1 mins read
4dba2f01-10de-42e4-858a-36ef3943fc56
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குள் வரும் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. இந்த நாடுகளுக்குள் வரும் வெளிநாட்டு முதலீடு கடந்த ஆண்டு 236 பில்லியன் அமெரிக்கா டாலராக (S$318 பில்லியன்) உயர்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலியை மாற்றியமைத்து, சீனாவில் மட்டுமே முதலீடு செய்யாமல் மற்ற நாடுகளிலும் முதலீடு செய்யும் அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளன.

இதன் விளைவாக சிங்கப்பூர் உட்பட ஆறு ஆசியான் நாடுகளுக்குள் வரும் முதலீடு அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குள் வரும் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.

இந்த நாடுகளுக்குள் வரும் வெளிநாட்டு முதலீடு கடந்த ஆண்டு 236 பில்லியன் அமெரிக்கா டாலராக (S$318 பில்லியன்) உயர்ந்தது.

வெளிநாட்டு முதலீடுகளைப் பொறுத்தவரை, 2020ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வருடாந்திர சராசரி 190 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகள் ஆக அதிகமாக முதலீடு செய்தன.

ஆசியானின் வலுவான சீர்திருத்தங்கள் அந்நாடுகளை ஈர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு சீனாவில் மட்டும் வர்த்தகம் செய்யும் அணுகுமுறையைப் பல நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான புவிசார் அரசியல் நெருக்கடிநிலையும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

சீனாவில் முதலீடு செய்ய முதலில் திட்டமிட்டிருந்ததாகவும் பிறகு வேறு நாடுகளில் முதலீடு செய்ய முடிவை மாற்றிக்கொண்டதாகவும் ஆய்வில் பங்கெடுத்தோரில் 40 விழுக்காட்டினர் கூறியதாக ஷங்காயில் உள்ள அமெரிக்க வர்த்தக, தொழிற்சபை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்