முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சியோ சாய் சென் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சியோ சாய் சென் காலமானார்

1 mins read
916872c9-f726-4b21-8564-3925fe8709f7
சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் முக்கிய நபர்களில் சியோ சாய் சென்னும் ஒருவர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீ சூன் சென்ட்ரல் தொகுதிக்கு 1991ஆம் ஆண்டு முதல் 1997 ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சியோ சாய் சென் காலமானார். அவருக்கு 73 வயது.

சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அவர் இருந்தார்.

திரு சியோவுக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் பாதிப்பு இருந்தது, அதனால் அவர் ஜூன் 4ஆம் தேதி உயிரிழந்தார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் துணை தலைவர் பிரையன் லிம் தெரிவித்தார்.

சியோவின் நல்லுடல் ஜூன் 6ஆம் தேதி தகனம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

திரு சியோ திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருக்கு நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்