போதைப்பொருள் பறிமுதல், இருவர் கைது

1 mins read
430905a1-d40a-4bba-9768-87bd3aac6b8a
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள். - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஜூன் 4ஆம் தேதியன்று அதிரடிச் சோதனை நடத்தியது.

இதில் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஏறத்தாழ 4.5 கிலோ கஞ்சா, 968 கிராம் ‘ஐஸ்’ உட்பட பலவகை போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட $692,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,200 போதைப் பித்தர்களுக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிரடிச் சோதனை சுவா சூ காங் ஸ்திரீட் 51க்கு அருகில் நடத்தப்பட்டது.

ஜூன் 4ஆம் தேதி இரவு, அந்த வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் கார் ஒன்றை அதிகாரிகள் வழிமறித்தனர்.

38 வயது கார் ஓட்டுநரையும் அவருடன் பயணம் செய்த 27 வயது ஆடவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆனால் அதற்கு முன்பு, கைது செய்யப்படாமல் இருக்க அந்த இரு ஆடவர்களும் வன்முறையில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக இரண்டு அதிகாரிகளின் கரங்களில் காயங்கள் ஏற்பட்டன.

அவர்களுக்கு வெளிநோயாளி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

காரில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்