வறுத்த வாதுமைப் பருப்பு பொட்டலங்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு மீட்டது

1 mins read
10ea31b0-8110-4e30-8cc4-1e87a996609c
வால்நட் எனப்படும் வாதுமை பருப்பு அடங்கிய 500 கிராம், 1 கிலோகிராம் பொட்டலங்கள் மார்ச் மாதம் 24, 25ஆம் தேதிகளில் தயாரிக்கப்பட்டவை. - படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

சீனாவில் இருந்து வரும் வால்நட் எனப்படும் வாதுமைப் பருப்பு பொட்டலங்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு தொடர்ந்து மீட்டு வருகிறது.

அந்தப் பருப்பு வகைகளில் ‘எசஸ்சுல்வேம்’ எனப்படும் ஒருவகை சுவை கூட்டி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதே அதற்குக் காரணமாக கூறப்படுகிறது

சீனாவிலிருந்து வரும் ‘ஸியுகோயுவான் ஸின்ஜியாங் பேப்பர் ரோஸ்டட் வால்நட்’ எனப் பெயரிடப்பட்ட அந்த வாதுமைப் பருப்பு தயாரிப்பில் சைக்கிலமேட் எனப்படும் மற்றுமொரு சுவை கூட்டியும் இருப்பதாக உணவு அமைப்பு வியாழக்கிழமை (ஜூன் 6ஆம் தேதி) அன்று தெரிவித்தது.

வாதுமை பருப்பு அடங்கிய அந்த 500 கிராம், 1 கிலோகிராம் பொட்டலங்கள் முறையே மார்ச் மாதம் 24, 25ஆம் தேதிகளில் தயாரிக்கப்பட்டவை என்று அமைப்பு விளக்கியது.

இதன் தொடர்பில் சிங்கப்பூர் உணவு அமைப்பு அந்தப் பொருள்களின் இறக்குமதியாளரான ஹோங் ஸின் டா என்ற நிறுவனத்தை அவற்றை மீட்டுக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

பொருள்களின் மீட்புப் பணி தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே பொருள்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு இதற்கு முன்னர் மே மாதம் 24ஆம் தேதி மீட்டுக்கொள்ள உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்