ஆறு பூனைக்குட்டிகளைச் சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற ஆடவர் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பிடிபட்டார்.
மலேசியரான 28 வயது லாவ் வெய் பின் தனது காரில் மறைத்து அவற்றைக் கடத்த முயன்றார்.
ஜூன் 7ஆம் தேதி அவர் மீது உரிமமின்றி விலங்குகளை இறக்குமதி செய்ய முயன்றதன் தொடர்பில் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஜூன் 6ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரில் அந்தப் பூனைக்குட்டிகளை அவர் கடத்த முயன்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
காரில் ஓட்டுநருக்கு அருகே உள்ள பகுதியை மாற்றியமைத்து அதில் ஆறு பூனைக்குட்டிகளையும் அவர் கொண்டுவந்தார். அவை அனைத்தும் உயிருடன் இருந்ததாகக் கூறப்பட்டது.
கார் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது, இந்தக் குற்றச்செயல் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பன பற்றிய மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிபட்சமாக 10,000 வெள்ளி அபராதமோ 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
ஆடவர் தற்போது 10,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை 5ஆம் தேதி இவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.