சிங்கப்பூரில் பதிவான $3 பில்லியன் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றத்துடன் தொடர்புடைய மேலும் ஓர் ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துபாய் சொத்து முகவரான சூ ஜியான்ஃபெங்கிற்கு 17 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தப் பணமோசடி விவகாரம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பத்து வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
மற்றவர்களுக்கு ஏற்கெனவே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.
அவர்களில் சிலர் தண்டனைக் காலத்துக்குப் பிறகு நாடு கடத்தப்பட்டனர்.
வனுவாட்டு நாட்டைச் சேர்ந்த 36 வயது சூ, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜூன் 6ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டார்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாகவும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சூவுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டபோது மேலும் 12 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
சூ ஜியான்ஃபெங்கின் $178.9 மில்லியன் பெறுமானமுள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.