இம்மாதம் 24ஆம் தேதியிலிருந்து ஜாலான் காயு, இயோ சூ காங், அங் மோ கியோ ஆகியவற்றுக்கு இடையே புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்படுகின்றன.
பேருந்து 86ஏ, சிலேத்தார் கேம்ப் வாயிலுக்குப் பிறகு உள்ள ஜாலான் காயு பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து தொடங்குகிறது. பதினெட்டு பேருந்து நிறுத்துமிடங்களைக் கடந்து அது, இயோ சூ காங் எம்ஆர்டி நிலையத்திற்கு முன்பு அங் மோ கியோ அவென்யூ 6ல் முடிவடையும்.
வார நாள்களில் பகலில் உச்ச நேரத்தில் மட்டுமே இச்சேவை வழங்கப்படும்.
பேருந்து 86ஏ, இயோ சூ காங் எம்ஆர்டி நிலையத்திற்கு எதிரே உள்ள அங் மோ கியோ அவென்யூ 6 பேருந்து நிறுத்துமிடத்தில் தொடங்கி சிலேத்தார் கேம்ப் வாயிலுக்கு முன்பு ஜாலான் காயுவில் முடிவடையும். இது, வார நாள்களில் மாலை உச்ச நேரத்தில் மட்டுமே சேவையாற்றும்.
இரண்டு சேவைகளும் வாரயிறுதியிலும் பொது விடுமுறையிலும் சேவை ஆற்றா.

