முக்கிய நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள்; ஹோட்டல் அறை தேவை அதிகரிக்கலாம்

முக்கிய நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள்; ஹோட்டல் அறை தேவை அதிகரிக்கலாம்

1 mins read
c91c5e2e-bf0f-4157-bbe8-c9cbda5b2910
ஹோட்டல் அறைகளுக்கான தேவை பேரளவில் அதிகரிக்கும் என உள்ளூர் ஹோட்டல்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இவ்வாண்டு பல முக்கியமான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற இருக்கின்றன.

இதனால் இவ்வாண்டின் பிற்பகுதியில் சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் அறைகளுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் எஃப் 1 கார் பந்தயம் நடைபெற இருக்கிறது.

அதேபோல சிங்கப்பூரில் இவ்வாண்டு பல இசைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

அவற்றில் பிரிட்டிஷ் ‘பாப்’ இசைப் பாடகர் டுவா லிப்பா, அமெரிக்கப் பாடகர் ஒலிவியா ரோட்ரிகோ, தைவானியப் பாடகர் ஜே சோ ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் அடங்கும்.

முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் இசை நிகழ்ச்சிகளை நேரில் கண்டு மகிழவும் வெளிநாடுகளிலிருந்து பலர் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் பலர் இங்குள்ள ஹோட்டல்களில் தங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஹோட்டல் அறைகளுக்கான தேவை பேரளவில் அதிகரிக்கும் என உள்ளூர் ஹோட்டல்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளன.

குறிப்புச் சொற்கள்