துணையாக பழகியவரின் $8 மி. பெண்ணுக்குச் சொந்தம் என தீர்ப்பு

துணையாக பழகியவரின் $8 மி. பெண்ணுக்குச் சொந்தம் என தீர்ப்பு

1 mins read
461e45b0-3c41-4b61-b790-ada775b8df19
அமெரிக்க ஆடவர் தம்முடன் பழகிய பெண்ணுக்குப் பரிசாக $8.5 மில்லியன் வழங்கினார். - கோப்புப் படம்: ஊடகம்

அமெரிக்க ஆடவர் ஒருவர் தம்முடன் பழகிய பெண்ணுக்கு அளித்த $8 மில்லியன் தொடர்பில் நிகழ்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

ஆண் துணை பரிசாக வழங்கிய தொகையை லோலிதா சாங் எனப்படும் அந்தப் பெண் வைத்துக்கொள்ளலாம் என்று சிங்கப்பூர் நீதிமன்றம் புதன்கிழமை (ஜூன் 12) தீர்ப்பளித்தது.

ஹாங்காங்கில் வசித்த ஜேம்ஸ் எங் ஜூனியர் எனப்படும் 76 வயது அமெரிக்க ஆடவர் 2018 செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். அவருடன் பழகிய சாங்கிற்கு தற்போது 64 வயது.

2016 அக்டோபர் மாதம் சாங்கிற்கு அவர் S$8.5 மில்லியன் வழங்க உத்தேசித்தார். அந்தத் தொகை 2017 ஜனவரியில் சாங்கின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இருப்பினும் நாணய மாற்று விகிதத்தில் அந்தத் தொகை $8.2 மில்லியனாக வந்து சேர்ந்தது. இடைப்பட்ட தொகையை வங்கியிடம் கேட்டு வழக்குத் தொடுத்தார்.

ஆயினும், தீர்ப்பளித்த நீதிபதி சூ ஹான் டெக், நாணய மாற்று விகித வித்தியாசம் காரணமாக அது அவ்வாறு வரவு வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்