தெம்பனிஸ் ஈஸ்ட் தொகுதியின் புதிய அடித்தள அமைப்புத் தலைவர் ஒருவரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி சனிக்கிழமை (ஜூன் 15) அன்று அறிமுகம் செய்து வைத்தார்.
தெம்பனிஸ் கல்வி விழாவில் அமைச்சர் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டு உரையாற்றியபோது, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்துதல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சார்லின் சென், தெம்பனிஸ் ஈஸ்ட் குடியிருப்பாளர்களுக்குச் சேவையாற்ற தம்முடன் இணைந்து பணியாற்றுவார் என்று குறிப்பிட்டார்.
அத்தொகுதியில் திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி 2023ஆம் ஆண்டு ஜூலை முதல் பணியாற்றி வருகிறார்.
அங்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திருவாட்டி செங் லி ஹுவி, 2023ஆம் ஆண்டு பதவி விலகினார்.
பேராசிரியர் சார்லின் சென், அடித்தள அமைப்புகளுக்கு இரண்டாம் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய திரு மசகோஸ், அவர் தாமாகவே முன்வந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

