10,000 மூத்தோருக்கு மின்னிலக்க வங்கித் திறன் பயிற்சி: ஓசிபிசி இலக்கு

10,000 மூத்தோருக்கு மின்னிலக்க வங்கித் திறன் பயிற்சி: ஓசிபிசி இலக்கு

1 mins read
79fc9087-f4a7-4fe0-b79f-1c0853f304f1
மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகளும் மூத்தோருக்குச் சொல்லித் தரப்படும் என்று ஓசிபிசி வங்கி தெரிவித்து உள்ளது. - படம்: ஷின்மின்

மின்னிலக்க வங்கித் திறன்களை மூத்தோர் கற்றுக்கொள்வதில் உதவ, தான் செயல்படுத்தி வரும் பயிற்சித் திட்டத்தை ஓசிபிசி வங்கி விரிவாக்கி வருகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 10,000 மூத்தோரிடம் மின்னிலக்க வங்கித் திறன்களை ஏற்படுத்த அவ்வங்கி இலக்கு கொண்டு உள்ளது.

மின்னிலக்க மூத்தோர் பயிற்சித் திட்டத்தில் மேலும் பல முதியோரை உள்ளடக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை ஓசிபிசி விளக்கியது.

சமூக நிலையங்களிலும் வீடமைப்புக் கழக நிகழ்ச்சித் திடல்களிலும் மூத்தோர் ஈடுபாட்டு நடவடிக்கைகள், குறைந்தபட்சம் ஐந்து பயிலரங்குகள், சிறு சிறு கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த வங்கி திட்டமிட்டு உள்ளது.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் போதுமான நம்பிக்கை இல்லாதது, புதிய தொழில்நுட்பங்களை அதிகமாக அறிந்திராதது போன்றவற்றால் மின்னிலக்கத்தைப் பயன்படுத்தத் தயங்கும் மூத்தோருக்கு உதவுவது அதன் நோக்கம்.

பயிற்சித் திட்டத்தில் பங்கேற்போருக்கு கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி எவ்வாறு பணம் செலுத்துவது, பணம் எடுப்பது என்பது சொல்லித் தரப்படும் என்றது ஓசிபிசி.

அத்துடன், மோசடிக்கு எதிரான பாதுகாப்பு நடைமுறைகளும் பயிற்சித் திட்டத்தில் அடங்கும் என்றது அந்த வங்கி.

ஜூன் 15ஆம் தேதி பீஷான் சமூக மன்றத்தில் நடைபெற்ற ஓசிபிசி வங்கியின் கேளிக்கை நிகழ்வுகளில் 800க்கும் மேற்பட்ட மூத்தோர் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்