கம்போடியாவின் வாய்ப்புகளைக்கைப்பற்ற சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு

கம்போடியாவின் வாய்ப்புகளைக்கைப்பற்ற சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு

1 mins read
8dc40417-76a3-4ea8-8367-e9e75ff85a80
சிங்கப்பூர் வர்த்தக அரங்கில் பேசிய கம்போடிய பிரதமர் ஹுன் மேனட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கம்போடியாவில் மறுக்க முடியாக வாய்ப்புகள் இருக்கின்றன. மதிப்புமிக்க நிதித் தொழில்நுட்பம், புத்தாக்கம், மின்னிலக்க தொழில்நுட்பம், பசுமை எரிபொருள், வேளாண்மை ஆகிய துறைகளில் முதலீடுகளைச் செய்ய சிங்கப்பூரர்களை கம்போடியா இரு கரம் கூப்பி வரவேற்கிறது.

கம்போடிய பிரதமர் ஹுன் மேனட் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

புதன்கிழமை (மே 19) நடைபெற்ற கம்போடியா-சிங்கப்பூர் வர்த்தக அரங்கில் அவர் முக்கிய உரை நிகழ்த்தியபோது கம்போடியாவில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி குறிப்பிட்டார்.

கம்போடிய வர்த்தக சபை, சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம், கம்போடியாவில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக சபை, கம்போடியாவில் வசித்த சிங்கப்பூரர்கள் சங்கம் ஆகியவை இதற்கு ஏற்பாடு செய்தன.

திரு ஹுன் மேனட், ஜூன் 18ஆம் தேதியிலிருந்து இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று அவரது பயணம் இடம்பெறுகிறது.

“சிங்கப்பூரும் கம்போடியாவும் இணைந்து இரு நாடுகளின் எதிர்கால வளர்ச்சிக்காக புத்தாக்கம், பொருளியல் உறவுகளை மேம்படுத்த முடியும்,” என்று கம்போடிய பிரதமர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கம்போடியாலாரன்ஸ் வோங்பிரதமர்