குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக14 பேர் மீது குற்றம் சாட்டப்படும்

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக14 பேர் மீது குற்றம் சாட்டப்படும்

1 mins read
7d84cbee-3776-466b-b585-04267dd4e46d
வழக்கமான சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தின்பேரில் 14 பேர் சிக்கினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் 14 வாகனமோட்டிகள் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை எதிர்நோக்குகின்றனர். ஆக இளையவருக்கு வயது 27. அதிக வயது உடையவர் 62 வயது நபர்

அவர்களில் ஒருவர், மீண்டும் மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்துள்ளார்.

ஜனவரி முதல் மே மாதம் வரை காவல்துறையினர் மேற்கொண்ட வழக்கமான மூச்சு சோதனையில் 14 பேரும் சிக்கினர். இம்மாதம் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலையாக வேண்டும்.

இதற்கு முன்பு இதே குற்றத்தைப் புரிந்த ஒருவர், ஜனவரி 17ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் மீண்டும் சிக்கினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 62 வயது நபருக்கு கட்டாயச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். 2013ஆம் ஆண்டில் இவர் இதே குற்றத்தைச் செய்துள்ளார்.

முதல் முறையாக குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தைப் புரிந்தவர்களுக்கு ஒராண்டு வரை சிறைத் தண்டனையும் $10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்