தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மோசடிகளைத் தடுக்க புதிய நெறிமுறைத் தொகுப்பு

ஆபத்தான விற்பனையாளர்களைத் தடுக்க ஃபேஸ்புக், கெரோசலுக்கு புதிய நெறிமுறைத் தொகுப்பு

2 mins read
38ce4c42-6140-4bea-bb04-571296b52a46
புதிய நெறிமுறைத் தொகுப்பைக் கடைப்பிடிக்க தவறுவோர் பிழை திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்படலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூன் 26 ஆம் தேதி தொடங்கி கெரோசல், ஃபேஸ்புக் போன்ற இணையச் சேவை வழங்குநர்கள், அச்சேவையைப் பயன்படுத்தும் விற்பனையாளர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோர் ஆபத்தானவர்களா என்பது குறித்து பரிசீலித்து உறுதிசெய்ய வேண்டும்.

அவர்கள் அரசாங்கம் வெளியிடும் பதிவுகளை ஆராய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய வர்த்தக மோசடிகளைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

அத்துடன், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வீசேட் போன்ற தகவல் தளங்கள் மோசடிக்காரர்களின் பொய்க் கணக்குகளை ஒழிக்கும் வகையில் அவை பற்றி நியாயமான சரிபார்ப்பு நடவடிக்கைகளை இவ்வாண்டு இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இணைய வர்த்தக, தரவுத்தளங்களின் மூலம் தங்கள் அடையாளங்கள் வெளியுலகுக்குத் தெரியாமல் மோசடிக்காரர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனைத் தடுக்கவே இணையச் சேவை வழங்குநர்களுக்கு இந்தப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைச் செய்யத் தவறுவது, இணையக் குற்றவியல் தீங்குச் சட்டத்தின்கீழ் குற்றச்செயல் புரிந்ததற்கு ஆளாக நேரிடும்.

இந்தப் புதிய நெறிமுறைத் தொகுப்பை உள்துறை அமைச்சு வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 21ஆம் தேதி) வெளியிட்டது. இது குறித்துக் கருத்துரைத்த உள்துறை அமைச்சு, இணைய வெளியில் சிங்கப்பூரர்களுக்கு எதிரான குற்றவியல் பாதிப்புகளைக் குறைக்க அரசாங்கம் தொடர்ந்து இது சார்ந்த தொழில் துறையுடன் இணைந்து பணியாற்றும் என்று கூறியது.

இதில் முதற்கட்டமாக, இணைய வர்த்தக சேவை தொடர்பான நெறிமுறைத் தொகுப்பின்படி, ஃபேஸ்புக், கெரோசல் போன்றவை ஆபத்தான விற்பனையாளர்கள் என்று கருதப்படுவோரை மட்டும் அவர்களின் அடையாளங்களை உறுதி செய்ய வேண்டியிருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எனினும், ஃபேஸ்புக் விற்பனைத் தளம், ஃபேஸ்புக் விளம்பரங்கள், கெரோசல் போன்றவற்றில் வரும் மோசடிச் சம்பவங்கள் கணிசமாகக் குறையாவிடில், உள்துறை அமைச்சு இவ்விரு நிறுவனங்களையும் அனைத்து விற்பனையாளர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோரின் அடையாளங்களை 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் உறுதிசெய்ய உத்தரவிடும்.

இவற்றுடன், இணைய வர்த்தகத் தளங்கள் கட்டணப் பாதுகாப்பு கட்டமைப்பையும் உருவாக்க வேண்டும். அதன்படி, வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருள், சேவை போன்றவை நல்ல முறையில் விநியோகிக்கப்பட்ட பின்னரே கட்டணம் போய்ச் சேர்வது உறுதிசெய்யப்படும்.

எனினும், இதன் தேவையை உள்துறை அமைச்சு இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்