சிங்கப்பூர் தீவின் தெற்குப் பகுதியில் கடந்த ஜூன் 14ஆம் தேதி எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்பொழுது மலேசியாவின் ஜோகூர் மாநில தென்கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு கடற்கரைப் பகுதிகளில் உள்ள எண்ணெய்க் கசிவை நீக்கி கடற்கரையைச் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து கருத்துரைத்த கடல் துறை, சிங்கப்பூர் துறைமுக ஆணையம் சாங்கியில் கடந்த ஜூன் 17ஆம் தேதி எண்ணெய்க் கசிவு ஏற்பட்டவுடன் அது மலேசிய கடற்பகுதிக்கும் பரவக்கூடும் என்று தெரிவித்ததாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது தெரிவித்தது.
“தற்பொழுது சக மலேசிய அதிகாரிகள் தாங்கள் ஜோகூர் கடற்கரைப் பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதைக் கண்டதாக ஜூன் 19ஆம் தேதி கூறினர்.
“அவர்களின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் நாங்கள் தேவையான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து வருகிறோம்,” என்று ஆணையத்தின் அதிகாரிகள் விளக்கினர்.
இது பற்றி வரும் மலேசிய செய்தித் தகவல்கள், புதன்கிழமை (ஜூன் 19ஆம் தேதி) அன்று சாங்கிக்கு கிழக்கே, சாங்கி படகு முனையத்திலிருந்து ஒரு மணிநேரப் பயண தூரத்தில், பெங்கராங் கடற்கரைப் பகுதியில் எண்ணெய் கசிவு இருப்பது தெரிந்ததாக தெரிவிக்கின்றன.

