சிங்கப்பூரர்கள் தங்களைச் சிறந்த நிலையில் கொண்டு செல்ல முனைந்து செயல்பட வேண்டும்.
இதற்கு அவர்கள் வெற்றி என்பதற்கு விரிவான பொருள் கண்டு சற்று நிதானிப்பது, பலவற்றை சோதித்துப் பார்ப்பது ஆகியவற்றை ஏற்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
இதைத்தான் தமது சாதனையாக கொள்ள விரும்புவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். எதிர்கால சிங்கப்பூர் எப்படி உருவெடுக்க வேண்டும் என சனிக்கிழமை (ஜூன் 22ஆம் தேதி) காணொளி ஒன்றில் அவர் பதிவிட்டார்.
“சமுதாயத்தை, வந்த வழியே திரும்பிச் செல்வது, ஒன்றை விட்டு மற்றொன்றில் ஈடுபடுவது, சற்று மெதுவாக செயல்படுவது, நிதானிப்பது, பலவற்றைச் சோதித்துப் பார்ப்பது போன்றவற்றுக்கு வாய்ப்பு வழங்கும் ஒன்றாக உருவாக்க வேண்டும் என நானும் எனது குழுவினரும் எண்ணம் கொண்டுள்ளோம்.
“வெற்றி பெறுவது என்பதற்கு விரிவான அர்த்தம் உண்டு என்பதை உணர்த்த விரும்புகிறோம். ஏட்டுக் கல்வியையும் தாண்டி அனைத்துப் பணியாளரும் அவரவர் துறையில், அவர்கள் செய்யும் பணிக்கு மதிப்பு தர வேண்டும் என முனைப்புடன் செயல்படுகிறோம்.
“ஒரு சமுதாயமாக மேலும் சிறந்த முறையில் செயல்படுவதற்கு எனக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதிகூறி செயல்படுவோம்,” என்று திரு லாரன்ஸ் வோங் கூறினார். சிங்கப்பூரர்கள் அனைத்து விதமான வெற்றியையும் கொண்டாடுவதுடன் அனைத்து வகையான வேலையையும் மதித்து நடக்க வேண்டும் என்றும் முயற்சி செய்வதற்கு என்றுமே தயங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
அவருடைய ஆறு நிமிட காணொளிப் பதிவில், சிங்கப்பூரர்களுடன் கலந்துரையாடும்போது சிங்கப்பூரர்களின் கனவு, சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை வெற்றி என்பதன் பொருள் என்ன என்பதே என்று திரு வோங் கூறினார்.
கையில் பணம், கார், கடன் அட்டை, அடுக்குமாடி வீடு, மனமகிழ் மன்ற உறுப்பியம் இவையே வாழ்க்கை வெற்றிக்கான அடையாளமாக கடந்த காலத்தில் பார்க்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வெற்றி என்பதற்கு இதுபோன்ற குறுகிய அர்த்தம் கற்பிப்பது எதிர்மறையான விளைவுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும். இதனால் பதற்றமான, ஒவ்வொருவரும் அடுத்தவரை விஞ்ச நச்சுத்தனமான போட்டித்தன்மையுடன் செயல்படும் சமுதாயமாக சிங்கப்பூர் உருவாகும் என திரு வோங் கூறினார்.

