தேர்தல் துறை 10 நடமாடும் பணி முகாம்கள் தயார்செய்து தருவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
‘ஜிபிஸ்’ என்ற அரசாங்க கொள்முதல் வலைத்தளத்தில் இந்த ஒப்பந்தப்புள்ளி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒப்பந்தப்புள்ளி ஜூலை 5ஆம் தேதி பிற்பகல் 1.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தப்புள்ளி கோரிக்கை அண்மையில் திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் பதிவேடு வெளியீட்டுக்குப் பின், அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்திலேயே வரலாம் என்ற ஊகம் நிலவும் தருணத்தில் வந்துள்ளது நினைவுகூரத்தக்கது. எனினும், அடுத்த பொதுத் தேர்தலை 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் நடத்த கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் துறை வெளியிட்டுள்ள திருத்தி அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜூலை 2ஆம் தேதிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதை சிங்கப்பூரர்கள் தங்கள் சிங்பாஸ் அடையாளத்தைக் கொண்டு தேர்தல் துறை இணையப்பக்கத்தில் தங்களைப் பற்றிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

