தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு டீசல் வாகனங்களின் புகை வெளியேற்ற அளவு கடுமையாகிறது

1 mins read
0ad2c7a4-b984-4a9b-b5ac-173e31a6011e
வாகனங்கள் மூலம் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2026 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டுப்பாடு கடுமையாக்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்குள் நுழையும் வெளிநாட்டு டீசல் வாகனங்களுக்கான புகை வெளியேற்ற அளவு 2026ஆம் ஆண்டில் கடுமையாக்கப்பட உள்ளது.

வாகனங்கள் மூலம் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2026 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டுப்பாடு கடுமையாக்கப்படுகிறது.

இது குறித்து தேசியச் சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமை (ஜூலை 1) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

2026 ஏப்ரல் முதல்,வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையின் அளவு 50 எச்எஸ்யு-வுக்கு மேல் இருந்தால் அந்த வாகனங்கள் சிங்கப்பூரின் நிலச் சோதனைச் சாவடிகளில் இருந்து திருப்பி அனுப்பப்படும் என்று அறிக்கை கூறியது.

டீசல் வாகனங்களின் புகை வெளியேற்ற அளவைக் கணக்கிடுவதற்கான மெட்ரிக் அளவீடுதான் எச்எஸ்யு.

தற்போதைய நிலவரப்படி 40 எச்எஸ்யு-வுக்கு மேல் புகையை வெளியேற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தக டீசல் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அதேநேரம், 60 எச்எஸ்யு-வுக்கு மேல் புகையை வெளியேற்றும் வெளிநாட்டு வாகனங்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதியில்லை.

புதிய 50 எச்எஸ்யு என்னும் அளவீடு ஆசியான் கட்டமைப்பு உடன்பாட்டின்கீழ் கடைப்பிடிக்கப்படும் புகை வெளியேற்ற தரநிலைகளுடன் ஒத்துப்போகிறது. இந்த உடன்பாடு 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வியட்னாமில் கையெழுத்தானது.

குறிப்புச் சொற்கள்