கட்டுமான நிறுவனத்தின் இயக்குநராக இருந்த டோ சாய் கியாட், வேறு நபர்களுடன் இணைந்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்ட முன்னாள் இயக்குநருக்கு கிட்டத்தட்ட $126,500 லஞ்சமாக வழங்கினார்.
இந்தக் குற்றத்திற்காக சாய் கியாட்டுக்கு ஒன்பது மாதச் சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) விதிக்கப்பட்டது.
லஞ்சத்தைப் பெற்றுகொண்ட வனவிலங்குத் தோட்ட முன்னாள் இயக்குநரின் பெயர் பேரி சோங் பெங் வீ. குற்றம் நடந்தபோது அவர் சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
முன்னதாகத் தன்மீது சுமத்தப்பட்ட மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளையும் சாய் கியாட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
50 வயதான சாய் கியாட் இந்தக் குற்றத்தை 2015ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்ததாகக் கூறப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய டோ யோங் சூன், டோ சே கியோங் ஆகியோருக்குச் சிறை தண்டனை ஏற்கெனவே விதிக்கப்பட்டன.
57 வயது பேரி சோங் வீயின் வழக்கு நிலுவையில் உள்ளது.
சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகத்தின் கிளை நிறுவனம் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம். சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் தற்போது மாண்டாய் வனவிலங்கு குழுமம் என அழைக்கப்படுகிறது.

