செந்தோசா தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் 2023ஆம் ஆண்டில் படகு வலித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 33 திருவாட்டி சியூ ஜியா தியேன் கடலில் மூழ்கி மாண்டார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று மூவருடன் சேர்ந்து திருவாட்டி சியூ படகு வலித்தலில் ஈடுபட்டார்.
திருவாட்டி சியூ மாயமானதை அடுத்து, அவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இரண்டு நாள்கள் கழித்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவரது சடலம் அழுகியிருந்தது.
அவர் கடலில் மூழ்கி மாண்டதாக உடற்கூராய்வில் தெரியவந்தது.
இந்நிலையில், அவர் அணிந்திருந்த உயிர்க்காப்புக் கவசம் பழுதடைந்திருக்கக்கூடும் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் புலன்விசாரணை அதிகாரியான கேப்டன் சியோங் குவீ தியாம் மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவித்தார்.