சிங்கப்பூர் வடமேற்கு வட்டாரத்தில் உள்ள ஸெங்குவா பேட்டையில் வாழும் 400க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு புதிய உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்க ‘பிராஜெக்ட் சமா சமா @ நார்த் வெஸ்ட்’ என்ற அந்தத் திட்டம் உதவும்.
ஸெங்குவாவில் பொது வாடகை திட்டத்தின் மூலம் வாடகை வீடுகளில் வசிக்கும் தகுதிபெறும் குடும்பங்களுக்கு மாதமாதம் 20 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
ஜூலை மாதம் முதல் தொடங்கும் இந்த உதவித்திட்டம் ஓராண்டுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
20 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை தானியங்கி விநியோக இயந்திரங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்கள், செய்தித்தாள்கள், மென்பானம், மருந்துகள் உள்ளிட்ட பலவற்றை வாங்கிக்கொள்ளலாம்.

