தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பிரவுன் இடுகாட்டில் வெளிப்புற காட்சிக்கூடம் ஆகஸ்டில் திறக்கப்படும்

1 mins read
7211772f-275e-458b-bff9-ccf645894beb
இந்த வெளிப்புற காட்சிக்கூடத்தில் கிட்டத்தட்ட 80 உரிமை கோராத கல்வெட்டுகள் இடம்பெறும். இவை பெரும்பாலும் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து சேகரிக்கப்பட்ட இறந்தோர் நினைவாக விளங்கும் கல்வெட்டுகளாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆகஸ்ட் மாதத்திலிருந்து புக்கிட் பிரவுன் இடுகாட்டில் இருந்து தோண்டப்பட்ட பகுதிகளின் அடையாளமாக விளங்கிய கல்வெட்டுகள் அங்கு மறுபடியும் காட்சிக்கு வைக்கப்படும்.

அந்த இடுகாடு லார்னி விரைவுச்சாலை பணிகளுக்காக தோண்டி எடுக்கப்பட்டது. ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் அந்தப் பகுதியிலேயே வெளிப்புற காட்சிக்காக ஆகஸ்ட் மாதத்திலிருந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சவுண்ட்ஸ் ஆஃப் தி எர்த்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வெளிப்புற காட்சிக்கூடத்தில் கிட்டத்தட்ட 80 உரிமை கோராத கல்வெட்டுகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து சேகரிக்கப்பட்ட இறந்தோர் நினைவாக விளங்கும் கல்வெட்டுகளாகும். லார்னி விரைவுச்சாலைக்காக அவ்வமயம் கிட்டத்தட்ட 4,000 கல்லறைகள் தோண்டப்பட்டன.

இந்தக் காட்சிக்கூடம் அந்த இடுகாட்டின் மரபுடைமை, அங்கு புதையுண்டவர்களின் வம்சாவளி ஆகியவற்றை கொண்டாடும் விதமாக அமையும். அத்துடன், சிங்கப்பூரின் வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பார்வையாளர்களுக்கு எடுத்துக் காட்டுவது இதன் நோக்கம்.

சிங்கப்பூர் மரபுடைமைக் கழகமும் ‘ஆல் திங்ஸ் புக்கிட் பிரவுன்’ என்ற அமைப்பும் இணைந்த புக்கிட் பிரவுனின் குரலோசை என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தக் காட்சிக்கூடம் விளங்கும் என்று விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்