தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்வி, கரிமப் புள்ளிகள் தொடர்பில் சிங்கப்பூர் - லாவோஸ் உடன்பாடு

2 mins read
bddf6a48-7e63-4634-8977-c60a309dd000
சிங்கப்பூருக்கு முதல் அதிகாரபூர்வ பயணமாக வந்த லாவோஸ் பிரதமர் சொனக்சே சிப்பான்டோனை பிரதமர் லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை (ஜூலை ஆம் தேதி) அன்று வரவேற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரும் லாவோசும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) அன்று கரிம ஊக்கப் புள்ளிகள் தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

இதன் மூலம் இரு நாடுகளும் வளர்ந்து வரும் இந்தத் துறையில் இருதரப்பு வர்த்தகத்தை ஏற்படுத்தவும் தங்களது 50 ஆண்டுகால நட்புறவை வலுவாக்கவும் வழி ஏற்படுத்தியுள்ளன.

இந்த ஒப்பந்தம் புதிய துறை ஒன்றில் ஒத்துழைப்பை ஏற்படுத்த வழி வகுத்திருப்பதாக பிரதமர் லாரன்ஸ் வோங் சிங்கப்பூருக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணமாக வந்திருக்கும் லாவோஸ் பிரதமர் சொனக்சே சிப்பான்டோனுக்கு அளித்த பகல் விருந்தின்போது தெரிவித்தார். லாவோஸ் பிரதமர் 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியேற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

“கரிம ஒத்துழைப்பை அமல்படுத்துவது தொடர்பான சட்டபூர்வ ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் கொடுக்க லாவேசுடன் அணுக்கமாக செயல்பட சிங்கப்பூர் எதிர்பார்ப்புடன் உள்ளது. அது இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் நம்மை மேலும் இணைய வழி ஏற்படுத்தும்,” என்று திரு வோங் தெரிவித்தார். கான்ராட் சென்டினியல் சிங்கப்பூர் ஹோட்டலில் இரு நாட்டு பேராளர்களிடையே பிரதமர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

இந்த ஒப்பந்தப்படி, இருதரப்பும் அனைத்துலக ரீதியில் சரிசெய்யப்பட்ட கரிம ஊக்கப்புள்ளிகளைப் பரிமாறிக் கொள்ள ஏதுவாக இருதரப்பு கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துகிறது என்று வர்த்தக, தொழில் அமைச்சு கூறுகிறது.

“இது எங்கள் பருவநிலை இலக்குகளை எட்ட உதவும். அத்துடன், முதலீடுகளுக்கு வழி ஏற்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது ஆகியவற்றுடன் தூய்மையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ஊக்குவிக்கும்,” என்று பிரதமர் வோங் விளக்கினார்.

டாக்டர் சொனக்சே சிங்கப்பூரில் ஒரு நாள் தங்குவார். முன்னதாக, அவரை திரு வோங், வழக்கத்துக்கு மாறாக இஸ்தானாவுக்கு பதில் நாடாளுமன்ற வளாகத்தில் லாவோஸ் பிரதமரை சடங்குபூர்வமாக வரவேற்றார். அதற்குக் காரணம் இஸ்தானாவின் சில பகுதிகளில் தற்பொழுது பெருமளவிலான சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் இரு நாட்டுப் பிரதமர்களும் கரிம ஊக்கப் புள்ளிகள் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை பார்வையிட்டனர்.

பசுமைப் பொருளியல் தொடர்பாக இரு நாடுகளும் மற்ற வழிவகைகளிலும் இணைந்து பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வந்திருக்கும் லாவோஸ் பிரதமர்  சொனக்சே சிப்பான்டோனுக்கு மதிய உணவு விருந்து அளித்து பிரதமர் லாரன்ஸ் வோங் கௌரவித்தார். உடன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், கல்வி அமைச்சர் சான் சுன் சிங் மற்றும் பலர்.
சிங்கப்பூருக்கு வந்திருக்கும் லாவோஸ் பிரதமர் சொனக்சே சிப்பான்டோனுக்கு மதிய உணவு விருந்து அளித்து பிரதமர் லாரன்ஸ் வோங் கௌரவித்தார். உடன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், கல்வி அமைச்சர் சான் சுன் சிங் மற்றும் பலர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.
குறிப்புச் சொற்கள்