தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரிவாக்க முயற்சி: புதிய வர்த்தகப் பிரிவைத் துவங்கிய ‘சேட்ஸ்’

1 mins read
6621af3c-020d-4ec8-a7bb-1434bca7daeb
கேட்வே சர்வீசஸ் வர்த்தகத்தின் தலைமை நிர்வாகி திரு போப் சீ (இடது), கேட்வே சர்வீசஸ் ஆசிய பசிபிக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார். சேட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஹென்ரி லோ (வலது) சிங்கப்பூர் ஹப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகிப்பார். அவர்களுடன் சேட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கேரி மோக் (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாடுகளில் தனது சேவைகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் சிங்கப்பூர் விமான நிலைய முனையச் சேவைகள் (சேட்ஸ்), புதிய வர்த்தகப் பிரிவைத் துவங்கியுள்ளது.

இப்பிரிவு ஆசிய பசிபிக் வட்டாரத்தில் கவனம் செலுத்தும்.

தனது ஆகப் பெரிய பிரிவான கேட்வே சர்வீசஸை, சேட்ஸ் நிறுவனம் மறுசீரமைத்துள்ளது.

அதிலிருந்து கேட்வே சர்வீசஸ் ஆசிய பசிபிக் மற்றும் சிங்கப்பூர் ஹப் ஆகிய இரண்டு புதிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கேட்வே சர்வீசஸ் பிரிவு பயணிகள் மற்றும் விமான நிர்வாகம், பயணப் பெட்டிகளைக் கையாள்வது, சரக்குகளைக் கையாள்வது போன்ற சேவைகளை வழங்குகிறது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் சேட்ஸ் நிறுவனத்தின் பங்கை கேட்வே சர்வீசஸ் ஆசிய பசிபிக் பிரிவு விரிவடையச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் உள்ள விமான நிலையங்களில் தனது சேவைகளை அப்பிரிவு நிர்வகிக்கும் என்று சேட்ஸ் நிறுவனம் கூறியது.

இது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரில் விமானப் போக்குவரத்து நடுவப் போட்டித்தன்மையை சிங்கப்பூர் ஹப் மேலும் தீவிரப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

சாங்கி மற்றும் சிலேத்தார் விமான நிலையங்களின் தற்போதைய, எதிர்காலத் தேவைகளுக்கு ஆதரவு வழங்க குழுமத்தின் ஆற்றலை அது மேம்படுத்தும் என்று சேட்ஸ் நிறுவனம் கூறியது.

கேட்வே சர்வீசஸ் வர்த்தகத்தின் தலைமை நிர்வாகி திரு போப் சீ, கேட்வே சர்வீசஸ் ஆசிய பசிபிக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.

சேட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஹென்ரி லோ சிங்கப்பூர் ஹப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகிப்பார்.

குறிப்புச் சொற்கள்