புதிய வசதிகளை ஏற்படுத்த கேலாங் சிராய் சந்தை மூன்று மாதத்திற்கு மூடப்படும்

புதிய வசதிகளை ஏற்படுத்த கேலாங் சிராய் சந்தை மூன்று மாதத்திற்கு மூடப்படும்

1 mins read
cb4259dd-c654-46a8-9e3e-80b538d04afa
நவம்பர் 1ஆம் தேதி கேலாங் சிராய் சந்தை மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: ஷின் மின்

கேலாங் சிராய் சந்தை புதுப்பிப்புப் பணிகளுக்காக இம்மாதம் (ஜூலை) 29ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஏறத்தாழ மூன்று மாத காலத்திற்கு மூடப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் அறிவித்திருப்பதாக ‘மதர்ஷிப்’ இணையச் செய்தி தெரிவித்துள்ளது.

உணவங்காடி நிலைய உருமாற்றத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட இருக்கும் புதுப்பிப்புப் பணிகள், வருங்கால உணவங்காடி நிலையக் கட்டமைப்பை உள்ளடக்கி மேற்கொள்ளப்படும் என்றும் அந்தச் செய்தி கூறியது.

காற்றோட்டத்தை அதிகரிக்கும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்படும். மின்விசிறிகளும் புதிய பொருத்துக் கருவிகளும் அதற்கேற்ற வகையில் மேம்படுத்தப்படும். சந்தைப் பிரிவில் கைகழுவுவதற்கு அதிக இடங்கள் எற்படுத்தப்படும்.

தரைக் கற்கள் மாற்றப்படும். எளிதில் சுத்தம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் ஏதுவான கழிப்பறைகளை ஏற்படுத்துவது போன்ற உள்கட்டமைப்பு மாற்றங்களும் மேற்கொள்ளப்படும்.

புதுப்பிப்புப் பணிகள் நிறைவுற்று, இவ்வாண்டும் நவம்பர் 1ஆம் தேதி கேலாங் சிராய் சந்தை மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த இணையச் செய்தி குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்