இந்தியாவின் நகை விற்பனை நிறுவனமான பீமா கோல்டு, சிங்கப்பூர் அனைத்துலக நகைகள் கண்காட்சியில் தனது தங்க, வைர நகை வகைகளை வாடிக்கையாளர்களுக்குக் காட்சிப்படுத்துகிறது.
சிங்கப்பூரில் நீண்ட காலமாக இயங்கிவரும் சிங்கப்பூர் அனைத்துலக நகைகள் (எஸ்ஐஜெஇ) கண்காட்சியை, இவ்வாண்டு ஜூலை 11ஆம் தேதி மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி மாநாட்டு நிலையத்தில் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் ஆல்வின் டான் திறந்துவைத்தார்.
தனது 19ஆம் ஆண்டுவிழாவை இவ்வாண்டு கொண்டாடும் எஸ்ஐஜெஇ, 30 நாடுகளைச் சேர்ந்த 335 தயாரிப்புகளின் 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் மதிப்புள்ள நகைகளையும் ரத்தினக் கற்களையும் காட்சிப்படுத்துகிறது.
இரண்டாம் முறையாக ‘எஸ்ஐஜெஇ’வில் பங்கேற்கும் பீமா கோல்டின் புதிய ஆபரண வகைகளைச் சாவடி பி05ல் (Booth P05) காணலாம்.
பாரம்பரிய, நவீன ஆபரண வடிவமைப்புகளின் கலவைக்காக அறியப்பட்ட பீமா கோல்டு, நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்ட தங்க, வைர நகைகளைக் காட்சிப்படுத்துகிறது.
பீமா கோல்டு சாவடிக்கு வருபவர்கள் 18K தங்கத்தில் தயாரிக்கப்பட்ட வைர காதணிகளைத் தினசரி சிறப்பு சலுகையில் வாங்கலாம்.
ஜூலை 14ஆம் தேதி, 18K தங்கத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி வைரக் காதணிகள் வழக்கமான விலையான S$8,700ல் இருந்து குறைக்கப்பட்டு S$7,199 எனச் சிறப்பு விலையில் கிடைக்கும்.
அதோடு, பீமா கோல்டு நடத்தும் அன்றாட அதிர்ஷ்டக் குலுக்கும் உண்டு. அதில் வெற்றிபெறும் இரண்டு வாடிக்கையாளர்களுக்கு 4 கிராம் எடையுள்ள 22K தங்க நாணயத்தை வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
‘எஸ்ஐஜெஇ 2024’ன் இறுதி நாள் ஜூலை 14ஆம் தேதி. அன்று கண்காட்சி காலை 11:30 மணிக்குத் தொடங்கி, இரவு 7:30 மணிவரை நடைபெறும்.
வருகையாளர்கள் பீமா கோல்டின் சாவடியைப் பார்வையிட்டு பிரத்தியேக சலுகைகளைக் கண்காட்சி முடியும்வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

