நகரும் படிக்கட்டில் காலணி சிக்கி சிறுவன் காயம்

நகரும் படிக்கட்டில் காலணி சிக்கி சிறுவன் காயம்

1 mins read
b8fd5a9e-fa60-435b-9bd4-76d249f54321
ஜூரோங் பாயிண்ட் பேரங்காடியில் இருக்கும் நகரும் படிக்கட்டுகளுக்கு இடையே ரப்பர் காலணி சிக்கியதால் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டது. - படம்: ஷின் மின் நாளிதழ்

ஜூரோங் பாயிண்ட் பேரங்காடியில் 9 வயது சிறுவன் ஒருவன் அணிந்திருந்த காலணி நகரும் படிக்கட்டில் சிக்கியது. காயமடைந்த அச்சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இரவு 7.50 மணியளவில் நடந்தது.

இதை நேரில் கண்ட இணையவாசி ஒருவர் ‘ரெடிட்’ சமூகத் தளமான பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், ஜூரோங் பாயிண்ட் பேரங்காடியில் நடந்த இச்சம்பவத்தைத் தான் நேரில் பார்த்தாகவும் அச்சிறுவன் சுமார் 40 நிமிடங்கள் நகரும் படிக்கட்டில் சிக்கிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்த இணையவாசி வெளியிட்ட புகைப்படத்தில், பல தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவியாளர்களும் சம்பவ இடத்தில் இருப்பதைக் காண முடிந்தது.

அச்சிறுவனை மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி மீட்டதாகவும் சிசிச்சைக்காக அவரைத் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.

அவர் அணிந்திருந்த காலணி நகரும் படிகளுக்கு இடையில் சிக்கியதால் சிறுவனுக்குக் காலில் காயம் ஏற்பட்டது என்று ஜூரோங் பாயிண்ட் பேரங்காடியை நிர்வகிக்கும் லிங்க் அசெட் மேனேஜ்மண்டின் பேச்சாளர் கூறினார்.

“நாங்கள் சிறுவனின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். இந்தச் சம்பவத்திலிருந்து அவர் மீண்டு வர அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் உதவியையும் தொடர்ந்து வழங்குவோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்