தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரண தண்டனை ரத்து; ஆடவரை விடுவிக்க உத்தரவு

1 mins read
7bbbf311-3152-4352-9a27-af02c3acd3d4
2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட முபின் அப்துல் ரஹ்மான் எட்டு ஆண்டுகள், ஒன்பது மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

போதைமிகு அபின்னைக் கடத்திய குற்றத்துக்காக 2020ஆம் ஆண்டில் முகம்மது முபின் அப்துல் ரஹ்மானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் 63 வயது முபினுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஜூலை 16ஆம் தேதியன்று ரத்து செய்தது.

அவர் மீது சுமத்தப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

மாறாக, methamphetamine வகை போதைப்பொருளை வைத்திருந்ததை முபின் ஒப்புக்கொண்டார்.

இந்தக் குற்றத்துக்கான சிறைத் தண்டனையை முபின் அனுபவித்துவிட்டதாக கூறிய நீதிமன்றம், அவரைச் சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டது.

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட முபின் எட்டு ஆண்டுகள், ஒன்பது மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்தார்.

முபினிடம் போதைமிகு அபின் எப்போது விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்து அரசாங்க வழக்கறிஞர்கள் ஒவ்வொரு முறையும் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டதாக நீதிமன்றம் கூறியது.

முபினிடம் போதைமிகு அபின்னைக் கொண்ட இரண்டு பொட்டலங்கள் எப்போது விநியோகம் செய்யப்பட்டன என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கில் முபினின் இளைய சகோதரரான 59 வயது லொக்மான் அப்துல் ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்