தேசிய தின அணிவகுப்பு ‘என்இ’ காட்சிகளுக்கு சாலைகள் மூடப்படும்

1 mins read
a0999157-b4f1-4acf-a9c6-e70b75654366
தேசிய தின அணிவகுப்பு தேசிய கல்வி நிகழ்ச்சி ஜூலை 20ஆம் தேதி பாடாங்கில் நடைபெறும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாடாங்கில் ஜூலை 20ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்பு தேசிய கல்வி (என்இ) காட்சிகளுக்காக, சில சாலைகளும் தடங்களும் வாகனங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

அப்போது, அனுமதிபெற்ற வாகனங்கள், காவல்துறை மற்றும் அவசர வாகனங்கள் மட்டுமே சாலைகளைப் பயன்படுத்தமுடியும் என்றுக் காவல்துறை புதன்கிழமை (ஜுலை 17) கூறியது.

பாதிக்கப்பட்ட சாலைச் சந்திப்புகளில் காவல்துறை அதிகாரிகள், துணைக் காவற்படை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகள் ஆகியோர் வாகனமோட்டிகளுக்கு உதவவும், வழிகாட்டவும் பணியில் அமர்த்தப்படுவர்.

பீச் ரோட், பிராஸ் பாசா ரோடு, கோலியர் கீ, கில்லிமார்ட் ரோடு, ஹில் ஸ்திரீட், மரினா பொலிவார்ட், மவுண்ட்பேட்டன் ரோடு, நார்த் பிரிட்ஜ் ரோடு, ஒஃபிர் ரோடு, ராஃபிள்ஸ் அவென்யூ, ராஃபிள்ஸ் பொலிவார்ட், ராஃபிள்ஸ் லிங்க், ரிபப்ளிக் பொலிவார்ட், ரோச்சோர் ரோடு, ஷியர்ஸ் லிங்க், தெமாசெக் அவென்யூ, தெமாசெக் பொலிவார்ட், விக்டோரியா ஸ்திரீட் ஆகியவை அந்தப் பாதிக்கப்பட்ட சாலைகளாகும்.

வாகனமோட்டிகள் தங்கள் பாதைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, இந்தச் சாலைகளைத் தவிர்க்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்