சிறிய வகை கார்களுக்கான சிஓஇ கட்டணம் $91,899ஆக அதிகரிப்பு

சிறிய வகை கார்களுக்கான சிஓஇ கட்டணம் $91,899ஆக அதிகரிப்பு

1 mins read
d996d4a3-da59-4694-a878-9657de34516b
பெரிய வகை கார்களுக்கான கட்டணம் $100,901லிருந்து $100,000ஆக குறைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூலை 17ஆம் தேதியன்று வாகன உரிமைச் சான்றிதழுக்கான (சிஓஇ) ஏலத்தில் கட்டணங்கள் ஏற்ற இறக்கமாக இருந்தன.

சிறிய வகை கார்களுக்கான கட்டணம் ஒரு விழுக்காடு அதிகரித்து $91,899ஆகப் பதிவானது.

பெரிய வகை கார்களுக்கான கட்டணம் $100,901லிருந்து $100,000ஆக குறைந்தது.

சிறிய வகை கார்களுக்கான கட்டணத்துக்கும் பெரிய வகை கார்களுக்கான கட்டணத்துக்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளது.

பொதுப் பிரிவுக்கான கட்டணம் 0.5 விழுக்காடு குறைந்து $100,341ஆகப் பதிவானது.

இந்தப் பிரிவை மோட்டார் சைக்கிள் அல்லாத மற்ற பிரிவுகளுக்குப் பயன்படுத்தலாம்.

ஆனால் அது பொதுவாகப் பெரிய வகை கார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் $8,900லிருந்து $9,089ஆக ஏற்றம் கண்டது.

தொடர்புடைய செய்திகள்

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 0.9 விழுக்காடு அதிகரித்து $70,601ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்