புதிய தலைமைத்துவக் குழுவைத் தேர்ந்தெடுத்த பாட்டாளிக் கட்சி

புதிய தலைமைத்துவக் குழுவைத் தேர்ந்தெடுத்த பாட்டாளிக் கட்சி

1 mins read
a7f003ed-3749-4edd-bdad-4727bca5179a
செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவா பாட்டாளிக் கட்சியின் ஊடகக் குழு தலைவராகவும் சக குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜேமஸ் லிம் இளையர் பிரிவுக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சி அதன் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவில் கடந்த ஜூன் மாதம் நடந்த அக்கட்சித் தேர்தலுக்குப் பிறகு சில மாற்றங்களை செய்துள்ளது. வரும் பொதுத் தேர்தலில் அக்கட்சியை வழிநடத்தும் அதன் புதிய அலுவலகப் பணியாளர்கள் குறித்த விவரங்களை புதன்கிழமையன்று (ஜூலை 17) அது வெளியிட்டது.

நான்கு துணை அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக வழக்கறிஞர் ஃபாட்லி ஃபவ்ஸியை இணைத்துக்கொள்வதாக அக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் மரீன் பரேட் குழுத்தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார்.

செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவா பாட்டாளிக் கட்சியின் ஊடகக் குழு தலைவராகவும் சக குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜேமஸ் லிம் இளையர் பிரிவுக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.

முன்னாள் பொங்கோல் ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் லீ லி லியான் ஊடகக் குழுவின் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

தற்போது செங்காங் நகர மன்றத்தில் நகர மன்ற உறுப்பினராக இருக்கும் திருவாட்டி லீ, நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளிக் கட்சியின் செயற்குழு ஜூலை 16ஆம் தேதி கூடியது. அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், தலைவர்கள் ஆகியோருக்கானத் தேர்தல் ஜூன் 30 ஆம் தேதி நடந்தது.

பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளராக மீண்டும் பிரித்தம் சிங் தேர்வு செய்யப்பட்டார்.திருவாட்டி சில்வியா லிம் தலைவராகத் தனது பதவியை மீண்டும் தக்க வைத்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்
பாட்டாளிக் கட்சிதலைவர்நாடாளுமன்ற உறுப்பினர்