சிங்கப்பூர், கோலாலம்பூருக்கு இடையே பயணம் மேற்கொள்வோருக்கு செப்டம்பர் முதல் மேலும் ஒரு தெரிவு இருக்கும்.
மலிவுக் கட்டண விமானச் சேவையான ஸ்கூட் கோலாலம்பூரின் சுபாங் விமான நிலையத்துக்கு அன்றாட சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்சின் மலிவுக் கட்டணச் சேவை நிறுவனமான ஸ்கூட், 180 பயணிகள் அமர்ந்து செல்லக்கூடிய ஏர்பஸ் ஏ320 ரக விமானத்தை இந்தப் பயணத்துக்கு பயன்படுத்தும். இதில் சிங்கப்பூரிலிருந்து ஒருவழிப் பயணமாக செல்லும் பயணிகள் ‘இக்கானமி’ எனப்படும் சாதாரணப் பயணக் கட்டணத்துக்கு S$83 செலுத்த வேண்டும். கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வரும் ‘இக்கானமி’ பயணக் கட்டணமாக, வரிகள் உள்பட, மலேசிய ரிங்கிட் 108 (S$31) செலுத்த வேண்டியிருக்கும்.
பயணம் செய்ய விரும்புவோர் வியாழக்கிழமை (ஜூலை 18ஆம் தேதி) முதல் ஸ்கூட் நிறுவனத்தின் இணையத்தளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். இது பின்னர் மற்ற விற்பனைத் தளங்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.