தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$500,000 மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்; வெளிநாட்டவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
ed65acd7-a8e3-4373-83e6-403bc07b57ad
இரண்டு சிங்கச் சிலைகளின் அடிப்பாகத்தில் கிட்டத்தட்ட 4.15 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

அலங்கார சிங்க சிலைகளுக்குள் கிட்டத்தட்ட $500,000 பெறுமானமுள்ள ‘ஐஸ்’ எனும் போதைப்பொருளைக் கடத்தியதாக ஹாங்காங்கைச் சேர்ந்த 25 வயது ஷி ஹோய் ஷிங்மீது வெள்ளிக்கிழமை (ஜூலை 18) குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

சாங்கி சவுத் ஸ்திரீட் 2ல் இருக்கும் ‘எஸ்எஃப்’ (SF) எக்ஸ்பிரஸ் எனும் தளவாட நிறுவனத்திற்கு அருகில் ஜூலை 16ஆம் தேதியன்று பிற்பகல் 12.20 மணியளவில் மொத்தம் 4.15 கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட ‘ஐஸ்’ எனும் போதைப்பொருள் உள்ள நான்கு பொட்டலங்கள் ஷிவிடம் இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

விமானச் சரக்குக் கிடங்கில் ஏற்றுமதி செய்ய அந்தப் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்த இரண்டு சிங்கச் சிலைகளைக் கொண்டுபோய் சேர்த்ததும் அவர் பிடிபட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

முன்னதாக, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கும் ஹாங்காங் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தையடுத்து ஷி சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஷியின் வழக்கு விசாரணை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்