தேசிய தின பொது வரவேற்பு தினம் ஜூலை 28ஆம் தேதி இஸ்தானாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அன்றைய தினம் அந்நிகழ்வில் பங்கேற்கலாம்.
நேரடி கலைநிகழ்ச்சிகளிலும் பல்வேறு நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் பங்கேற்பதோடு இஸ்தானாவைச் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வில் பங்கேற்கலாம்.
ஜூலை 28ஆம் தேதி காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை தேசிய தின பொது வரவேற்பு தினம் கடைப்பிடிக்கப்படும்.
கலைநுட்பங்களைப் பயன்படுத்தி சிங்கப்பூர் கொடியையும் மெர்லயன் காந்த உருவங்களையும் தயாரிப்பது உள்ளிட்ட தேசிய தின கருப்பொருள் கொண்ட நடவடிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் அவர்கள் கலந்துகொள்ளலாம்.
உணவுக் கடைகளும் நினைவுப் பொருள்களை வழங்கும் கூடாரங்களும் அங்கு இருக்கும்.
தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பல-இன இசை, நடன நிகழ்ச்சிகளையும் இஸ்தானா பொது வரவேற்பு தினத்தில் கண்டு மகிழலாம்.

