அதிபர், பிரதமர் வியட்னாமிய தலைவருக்கு அஞ்சலி

1 mins read
eecd29b0-e606-4dd5-9395-fe7c64a7483f
வியட்னாமிய தலைவர் நுயென் பு டிரோங் வெள்ளிக்கிழமை (ஜூலை 19ஆம் தேதி) அன்று இறந்தார். - படம்: இபிஏ

வியட்னாமிய தலைவர் நுயென் பு டிரோங் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) அன்று இறந்தார். அவருக்கு வயது 80.

அவருக்கு அஞ்சலி செலுத்திய அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவர் வியட்னாமிய மக்களின் வாழ்க்கை மேம்பட தமது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்று புகழாரம் சூட்டினார்.

திரு டிரோங் வியட்னாமின் முன்னாள் அதிபரும் வியட்னாமிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமாவார்.

இது குறித்து வியட்னாமிய அதிபர் டோ லாமுக்கு அதிபர் தர்மன் ஜூலை 20ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், “பொதுச் செயலாளர் டிரோங் தமது வாழ்நாள் முழுவதும் வியட்னாமிய மக்களை மேம்படுத்துவதற்கு பாடுபட்டார். அவர்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பது, வியட்னாமின் வளப்பம் ஆகியவை அவருடைய பணிக்கு எடுத்துக்காட்டு,” என்று கூறினார்.

வியட்னாமில் ஊழலை ஒழிப்பதில் அவருடைய அர்ப்பணிப்பும் அவருடைய தலைமைக்கு சான்றாக விளங்குகிறது என்று திரு தர்மன் தெரிவித்தார்.

“வியட்னாமின் ஆற்றலிலும் அவர் திடமான நம்பிக்கை வைத்திருந்தார். அத்துடன், வியட்னாமிய கம்யூனிஸ்ட் கட்சியும் அந்நாட்டு அரசாங்கமும் அதை வெளிக்கொண்டு வருவதில் அயராது பாடுபாட்டார் என்றும் திரு தர்மன் விளக்கினார்.

இந்நிலையில், தமது ஃபேஸ்புக் பதிவில் திரு டிரோங்குக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் லாரன்ஸ் வோங், வியட்னாமிய பிரதமர் பாம் மின் சின்னுக்கு தமது அனுதாபங்கங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்