‘மை ரிபப்ளிக்’ நிறுவனத்தின் இணையச் சேவை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதன் மெல்லிழை விரிவலைச் சேவை ஜூலை 21ஆம் தேதி பாதிக்கப்பட்டது.
இதனால், கிட்டத்தட்ட 45,637 ‘மை ரிபப்ளிக்’ பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.
கருவிகளை மேம்படுத்திக் கொண்டிருந்தபோது இந்தச் செயலிழப்பு ஏற்பட்டது என்றும் இணையச் சேவையைப் பாதிக்கும் வகையில் எந்தப் பராமரிப்பு பணிகளையும் நிறுவனம் மேற்கொள்ளவில்லை என்றும் ‘மை ரிபப்ளிக்’ நிறுவனத்தின் பயனர் சேவை பிரிவின் துணைத் தலைவர் டெர்ரி வில்லியம்ஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாகப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.
மேலும், உடனடியாக நாங்கள் அந்தக் கோளாற்றைச் சரிசெய்து விட்டோம். இருப்பினும், சில வாடிக்கையாளர்கள் தங்கள் மெல்லிழை விரிவலை முனையங்கள் அல்லது தகவல் தொடர்பு சாதனங்களை (மோடம்) மறுதொடக்கம் செய்ய வேண்டியிருந்தது. மறுதொடக்கம் செய்தவர்களுக்குத் தடங்கலின்றி மீண்டும் இணையச் சேவை கிடைத்தது,”என அவர் கூறினார்.

