தெங்கா பொலிவார்டில் புதிய பேருந்து நிலையம் ஜூலை 21ஆம் தேதியன்று திறக்கப்பட்டது.
அத்துடன், தெங்கா வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கான புதிய பேருந்துச் சேவையும் அதே நாளன்று தொடங்கியது.
பேருந்து எண் 871, பியூட்டி வோர்ல்ட் எம்ஆர்டி நிலையம் வழியாகச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தையும் புதிய பேருந்துச் சேவையும் தெங்கா வட்டாரக் குடியிருப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்.
தெங்காவில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை டவர் டிரான்சிட் நிறுவனம் நிர்வகிக்கிறது.
அங்கு பேருந்து எண், 870, 871, 992 என மூன்று பேருந்துச் சேவைகள் உள்ளன.
ஜூலை 21ம் தேதியிலிருந்து, ஏற்கெனவே அங்கு இருந்து வரும் இரண்டு பேருந்துச் சேவைகள் கூடுதல் இடங்களுக்கு அவற்றின் சேவைகளை வழங்கும்.
பேருந்து எண் 992ன் பயணப் பாதை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதில் தெங்கா கார்டன் வாக், தெங்கா டிரைவ், தெங்கா பொலிவார்ட் ஆகியவை அடங்கும்.
பேருந்து எண் 870, தெங்கா போலிவார்ட்டிற்குச் செல்கிறது.
தெங்கா வட்டாரத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவை போதுமான அளவுக்கு இல்லை என்று அவ்வட்டாரக் குடியிருப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்ததாக 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவ்வட்டாரத்தில் புதிய பேருந்துச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது நிலைமை மேம்பட்டது.
தெங்கா வட்டாரம் முழுமையடைந்ததும் அங்கு 30,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் இருக்கும்.
ஜூன் 13ஆம் தேதி நிலவரப்படி அங்கு தயாராக இருக்கும் 6,911 வீடுகளில் 4,640 வீடுகளின் உரிமையாளர்கள் வீட்டுச் சாவியைப் பெற்றுவிட்டதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.