மனைவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவருக்கு சிறை, பிரம்படி

மனைவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவருக்கு சிறை, பிரம்படி

1 mins read
0420db6f-ca18-468e-a3a0-1634edf3e75c
காவல்துறையில் அளித்த புகாரைத் திரும்ப பெற்றுக்கொள்ளும்படி தமது மனைவியை அந்த 38 வயது ஆடவர் வற்புறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

மனைவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்கும் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததற்கும் 38 வயது ஆடவருக்கு ஜூலை 22ஆம் தேதியன்று எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

சொந்த மனைவியாக இருந்தாலும் அவரது இசைவின்றி அவருடன் பாலியல் உறவு கொள்வோருக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று 2020ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, அதுதொடர்பாக ஒருவருக்குத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை.

பாதிப்படைந்த பெண்ணின் அடையாளத்தைக் காக்க குற்றம் புரிந்த ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் இன்னும் கணவன்-மனைவியாக உள்ளனர்.

தமக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து அந்த ஆடவர் வழக்கு கோரினார்.

காவல்துறையில் அளித்த புகாரைத் திரும்ப பெற்றுக்கொள்ளும்படி தமது மனைவியை அவர் வற்புறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாம் சிறைக்குச் சென்றால் பிள்ளைகளை வளர்ப்புப் பெற்றோர் வளர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் வழக்கு தொடர்பான விவரங்கள் நாளிதழ்களில் வெளியிடப்படும் என்று கூறி தமது மனைவியின் மனதை மாற்ற முயன்றார்.

அந்த ஆடவருக்கும் அவரது மனைவிக்கும் ஒரே வயது.

அவர்கள் 2012ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர்.

அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்