தேசிய தினத்தை முன்னிட்டு தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் ‘இந்தியன்.எஸ்ஜி’ (Indian.SG) தமிழ்மொழிப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
‘என் சிங்கப்பூர்’ என்ற கருப்பொருளில் அமைந்த வண்ணம் தீட்டும் போட்டியில் பாலர் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.
தொடக்கநிலை மாணவர்களுக்காக ‘ஒரு நிமிடம் பேசலாமா?’ பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் தொடக்கநிலை 1, 2, 3 மாணவர்கள் பங்கேற்கலாம்.
போட்டிகள் ஆகஸ்ட் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று எண் 100 விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள மத்திய பொது நூலகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
சிறார்கள், பெற்றோர்கள் என சுமார் 300 பேர் இந்நிகழ்வில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவரங்களுக்கு www.indian.sg என்ற இணையத்தளத்தை அணுகலாம்.

