கெட்கோ, சார்ஜ்+ ஆகியன 2025ஆம் ஆண்டுவாக்கில் 100 தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் பகிர்வு அடிப்படையில் மின்சார கார்களையும் மின்னூட்டு நிலையங்களையும் வழங்க திட்டமிட்டுள்ளன.
இதன் மூலம் தனியார் அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மின்சார கார்களை எளிதில் பயன்படுத்த முடியும் என்று திங்கட்கிழமை (ஜூலை 29) வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இரண்டு நிறுவனங்களும் தெரிவித்தன.
மின்னூட்டு நிலையங்கள் அமைக்கும் நடவடிக்கை தீவிரமாக்கப்படும் என்றும் அவை கூறியுள்ளன.