தேசிய தினக் கொண்டாட்டம்: சில பேருந்துச் சேவைகளில் மாற்றம்

தேசிய தினக் கொண்டாட்டம்: சில பேருந்துச் சேவைகளில் மாற்றம்

2 mins read
eb0ec045-e0b7-421d-b10c-41210479e541
தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சில பேருந்துச் சேவைகள் வேறு பாதையில் திருப்பிவிடப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி, ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதியன்று நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டு நகரத்தின் வழியாகச் செல்லும் பல பேருந்து சேவைகள் வேறு பாதைகளில் திருப்பி[Ϟ]விடப்படும். பீச் சாலை, பிராஸ் பாசா சாலை, நார்த் பிரிட்ஜ் [Ϟ]சாலை, பார்லிமென்ட் பிளேஸ், ராஃபிள்ஸ் அவென்யூ, ராஃபிள்ஸ் பொலிவார்ட் ஆகிய இடங்களில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் [Ϟ]சேவை வழங்காது.

எஸ்எம்ஆர்டி பேருந்துச் சேவைகளான பேருந்து எண் 61, 960, 960e,961 மற்றும் 961M ஆகியவைக் குறிப்பிட்ட நேரங்களில் சில பேருந்து நிறுத்தங்[Ϟ]களில் நிறுத்தப்படாது.

பேருந்து எண் 961 மற்றும் 961M நாள் முழுவதும் ரா[Ϟ]ஃபிள்ஸ் ஹோட்டலுக்குப் பிறகு உள்ள பேருந்து நிறுத்தத்திலும் உச்ச நீதிமன்ற நிறுத்தத்துக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தப்படாது.

வாரயிறுதி நாள்கள் மற்றும் பொது விடுமுறைகளின்போது மட்டும் இயங்கும் பேருந்து எண் 961M, பிரோமினாட் எம்ஆர்டி நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திலும் பான் பசிபிக் நிறுத்தத்திலும் சேவை வழங்காது.

ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று எஸ்பிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பல பேருந்துச் சேவைகள் சில பேருந்து நிறுத்தங்களில் சேவை வழங்காது.

பேருந்து எண் 10, 14, 16/16M, 32, 51, 56, 57, 63, 70/70M, 80, 100, 107/107M, 111, 124, 130, 131, 133, 145, 166, 174, 195, 196, 197, 502, 851, 851e ஆகியவை வேறு பாதையில் திருப்பிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 3ஆம், 9ஆம் தேதிகளில் கோ-அஹெட் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து எண் 36, 518 ஆகியவை பேஃபிரண்ட் அவென்யூ, ராஃபிள்ஸ் அவென்யூ, தெமாசெக் அவென்யூ, தெமாசெக் பொலிவார்ட் ஆகிய இடங்[Ϟ]களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் காலை 8 மணியிலிருந்து இரவு 11.59 மணிவரை சேவை வழங்காது.

டவர் டிரான்சிட் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து எண் 77, 97, 106, 167, 857 ஆகியவை சில பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படாது.

கூடுதல் விவரங்களுக்கு பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்களின் இணையப்பக்கம் அல்லது சமூக ஊடகப் பக்கங்களை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்