பிரதமர் லாரன்ஸ் வோங்கின் முதல் தேசிய தினச் செய்தி: அமைச்சர் சண்முகம் தமிழில் வழங்குவார்

பிரதமர் லாரன்ஸ் வோங்கின் முதல் தேசிய தினச் செய்தி: அமைச்சர் சண்முகம் தமிழில் வழங்குவார்

1 of 2
படம்: சாவ்பாவ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

01 Aug 2024 - 12:15 pm

1 mins read

பிரதமரும் நிதியமைச்சருமான திரு லாரன்ஸ் வோங்கின் முதல் தேசிய தினச் செய்தி ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒலி, ஒளிபரப்பாகும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் தமது செய்தியை ஆங்கிலத்தில் வாசிப்பார். அது சிஎன்ஏ ஒளிவழியிலும், சிஎன்ஏ 938 வானொலியிலும் மாலை 6.45 மணிக்கு ஒளி, ஒலிபரப்பாகும்.

உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் அச்செய்தியைத் தமிழில் வழங்குவார்.

ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 9 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியிலும் ஒலி 968 வானொலியிலும் தமிழ் உரை ஒளி, ஒலிபரப்பாகும்.

பிரதமரின் தேசிய தினச் செய்தியை மாண்டரின் மொழியில், துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் வழங்குவார்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி பிரதமரின் தேசிய தினச் செய்தியை மலாய் மொழியில் வழங்குவார்.

பிரதமரின் தேசிய தினச் செய்தியைப் பிரதமர் அலுவலக இணையத்தளம் வழியாகவும் (www.pmo.gov.sg) யூடியூப் வழியாகவும் (www.youtube.com/pmosingapore) நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் காணலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பிரதமர்லாரன்ஸ் வோங்