தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போப் வழிபாட்டுக் கூட்டம்; நுழைவுச் சீட்டு முடிவுகள் ஆகஸ்ட் 5ல் வெளியீடு

2 mins read
ba43212a-74ad-43b4-a8ff-767489534c5d
போப்பாண்டவர் பிரான்சிஸ் செப்டம்பரில் சிங்கப்பூருக்கு வருகிறார். - ஏஎஃப்பி

சிங்கப்பூருக்கு சிறப்பு வருகையளிக்கும் போப்பாண்டவர் பிரான்சிஸ், மாபெரும் வழிபாட்டுக் கூட்டத்தை நடத்துகிறார்.

அதில் பங்கேற்க நூற்றுக் கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் குலுக்கல் முறையில் மட்டுமே அதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் யார் யாருக்கு அந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற விவரம் இம்மாதம் 5ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

செப்டம்பர் 12ஆம் தேதி தேசிய விளையாட்டரங்கில் அந்த கூட்டுப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறுகிறது.

வாய்ப்பு கிடைத்தவர்கள் பங்கேற்க முடியாமல் போனால் மற்றொரு குலுக்கலில் கிடைக்காதவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படும்.

கடந்த ஜூன் 24ஆம் தேதி 40,000க்கும் மேற்பட்ட நுழைவுச் சீட்டுகளுக்கான குலுக்கல் தொடங்கப்பட்டு ஜூலை 31ஆம் தேதி நிறைவடைந்தது.

கடந்த ஜூலை 24ஆம் தேதி வெளியிட்ட தகவலில் சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்கப் பேராயத்தின் அதிகாரபூர்வ நாளேடான கத்தோலிக்க நியூஸ், குலுக்கல் முடிவுகள் ‘myCatholicSG’ வழி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தெரிவிக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10.00 மணி அளவில் குலுக்கல் முடிவுகள் வெளியிடப் படும் என்று ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ‘myCatholicSG’ இணையத் தளத்தில் இடம்பெற்ற தகவல் குறிப்பிட்டது.

வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தவர்கள் நுழைவுச் சீட்டு வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று ஜுலை 29 அன்று அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனால் மின்நுழைவுச்சீட்டு கிடைத்து பங்கேற்க விரும்புவோர் எதுவும் செய்யத் தேவையில்லை என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்