பல நாடுகளில் பெரிய அளவில் செயல்படும் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த வூ ஜின்சியாங், 27, என்ற அந்த நபர் மீது ஜூலை 29ஆம் தேதி நேர்மையற்ற முறையில் பொருள்களை வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
$183,000க்கும் மேற்பட்ட மதிப்புள்ள பொருள்களை அவர் கையாடியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
வீடு புகுந்து திருடிய இதர வெளிநாட்டவர்களுக்கும் வலை வீசப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) ஊடகங்களிடம் பேசிய காவல்துறையினர், ரயில் பசுமைப் பாதைக்கு அருகே புக்கிட் செடாப் ரோட்டில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகே வூ கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.
காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருட்டுப் பொருள்களில் சிலவற்றை அவர் எடுக்கச் சென்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
ஹாலண்ட் டிரைவ் பகுதியில் கைது செய்யப்பட்ட வூ, கேலாங் ரோட்டில் உள்ள ஹோட்டல் அறைக்கு அதிகாரிகளை அழைத்துச் சென்றார். அங்கிருந்து மற்றொரு பகுதி திருட்டுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
ஆகஸ்ட் 2ஆம் தேதி 11.00 மணியளவில் வூவை சம்பவ இடமான ஹாலண்ட் டிரைவ் வட்டாரத்திற்கு அழைத்துச் சென்று அவர் எப்படி திருட்டில் ஈடுபட்டார் என்பதை அதிகாரிகள் செய்து காட்ட வைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வழக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.