தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தகுதிச் சுற்றில் 200 மீட்டர் 23.21 வினாடியில் ஓடிய சாந்திக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

1 mins read
பாரிசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 200 மீட்டர் தகுதிச் சுற்று ஓட்டத்தில் சாந்தி பெரேரா கடைசி நிலையில் 23.21 வினாடிகளில் ஓடி முடித்தார்.
3224ba6c-7e40-4075-b3d7-b2fba73bd07a
ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 4) 200 மீட்டர் தகுதிச் சுற்று ஓட்டத்தில் சாந்தி பெரேரா (வலக்கோடி). - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: பாரிசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 200 மீட்டர் தகுதிச் சுற்று ஓட்டத்தில் சாந்தி பெரேரா கடைசி நிலையில் 23.21 வினாடிகளில் ஓடி முடித்தார்.

எனினும், அரையிறுதிப் போட்டியில் அவர் தகுதிபெறும் வாய்ப்பு அவருக்கு மீண்டும் வழங்கப்பட உள்ளது.

அவர் ஐந்தாவது தகுதிச் சுற்று ஓட்டத்தில் அமெரிக்கப் பெண்மணியான பிரிட்டனி பிரவுன், ஜமைக்காவின் லானே தாவா, பிரிட்டனின் பியான்கா வில்லியம்ஸ் ஆகிய அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள முதல் மூன்று ஓட்டக்காரர்களுக்குப் பின்னால் ஓடி முடித்தார்.

ஒவ்வொரு தகுதிச் சுற்றிலும் முதல் மூன்று போட்டியாளர்களே நேராக அரையிறுதிக்குத் தகுதி பெறுவர்.

எனினும், மற்றவர்கள் மேலும் ஒரு தகுதிச் சுற்று ஓட்டத்தில் பங்குபெற்று அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவர்.

சாந்தி பெரேரா 200 மீட்டர் ஓட்டத்தில் பங்குபெற்ற 45 வீராங்கனைகளில் 31வது இடத்தைப் பிடித்த நிலையில், அவர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5ஆம் தேதி) நடைபெற உள்ள இன்னொரு தகுதிச் சுற்று ஓட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பைப் பெறுவார்.

குறிப்புச் சொற்கள்