ஹியுண்டாயின் சமூகத்திற்குத் திரும்ப வழங்கும் திட்டம்

ஹியுண்டாயின் சமூகத்திற்குத் திரும்ப வழங்கும் திட்டம்

1 mins read
2bfa2cc3-7a5a-43dd-bba9-fe3e75aa2a5b
ரெயின்போ நிலையத்தின் பயனாளிகளுடன் தென்கொரிய தூதரும் அதிபர் தர்மன் சண்முகரத்னமும். - படம்: எச்எம்ஜிஐசிஎஸ்

ஹியுண்டாய் மோட்டார் குழுமம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3ஆம் தேதி) அன்று தனது நிறுவன சமுதாய பொறுப்புத் திட்டம் (corporate social responsibility, CSR) என்ற ஒன்றை அறிவித்தது.

இந்த நிகழ்ச்சிக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் வருகை அளித்தார். இதில் அதிபர் சவால் மற்றும் சிங்கப்பூர் உணவு வங்கி தொடர்பான இரண்டு புரிந்துணர்வு குறிப்புகள் கையெழுத்திடப்பட்டன.

இந்த சிஎஸ்ஆர் என்ற திட்டம் இளையர் மற்றும் சமூகங்களை மேம்படுத்தும் திட்டமாகும். இதன்மூலம், ஹியுண்டாய் நிறுவனம் சிங்கப்பூரில் தனது திருப்பித் தரும் நடவடிக்கைகளை நீடித்து நிலைத்திருக்கும் ஒரு திட்டமாக வடிவமைக்க உள்ளது.

ஹியுண்டாய் நிறுவனம் தனது மின்சார வாகனங்களை அமைக்கும் மையத்தில் ஒரு விவேக காய்கறிப் பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த விவேக காய்கறிப் பண்ணை பற்றிக் கூறும் ஹியுண்டாய் மோட்டார் குழுமத்தின் உத்திபூர்வ பங்காளித்துவ மேலாளர் சோஃபியா இப்ராகிம், இந்தப் பண்ணையில் நாள்தோறும் 30 கிலோகிராம் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

இது வருங்காலத்தில் நீடித்த நிலைத்தன்மை உடைய வேளாண் தீர்வுகளுக்கு ஒரு சோதனைக்களம் என்று அவர் வருணித்தார்.

குறிப்புச் சொற்கள்