சிங்கப்பூரின் 59வது தேசிய தினத்தை டெக் கீ வட்டார மக்கள் விமரிசையாகக் கொண்டாடினர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டெக் கீ சமூக மன்றத்தில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கொண்டாட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை நடைபெற்றது.
டெக் கீ தொடக்கப்பள்ளியின் தாள வாத்திய மன்றத்தின் இசை விருந்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.
டெக் கீ வட்டாரத்தில் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியைச் சேர்ந்த சிறுவர்களின் நடனம், பார்ப்போர் மனதை வெகுவாகக் கவர்ந்தது.
டெக் கீ வட்டாரக் குடியிருப்பாளர்களுடன் மூத்த அமைச்சரும் அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான லீ சியன் லூங்கும் நிகழ்ச்சியைக் கண்டு களித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராகப் பதவி வகித்த திரு லீ, கடந்த மே மாதம் பதவி விலகினார்.
அதன் பிறகு, இதுவே மூத்த அமைச்சராக அவர் கலந்துகொள்ளும் முதல் தேசிய தினக் கொண்டாட்டம்.
தொடர்புடைய செய்திகள்
திரு லீ, 1984ஆம் ஆண்டில் தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
அப்போதிலிருந்தது இன்றுவரை அவர் டெக் கீ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

