கார், டிரக் மோதிய விபத்தில் மூன்றுகுழந்தைகள் உட்பட ஏழு பேர் காயம்

கார், டிரக் மோதிய விபத்தில் மூன்றுகுழந்தைகள் உட்பட ஏழு பேர் காயம்

1 mins read
3352805c-0d18-4a76-8eea-7a2256513a90
டிரக்கின் இருக்கையில் சிக்கிய ஓட்டுநரை குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். - படம்: டெலிகிராம்/ எஸ்ஜி சீக்ரெட் சேனல்

தேசிய தினத்தன்று சாலை விபத்தில் சிக்கிய ஏழு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்குவர். நான்கு வயது குழந்தையும் 70 வயது முதியவரும் விபத்தில் சிக்கினர்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி பிற்பகல் 2.40 மணியளவில் சிம்ஸ் வே அருகில் உள்ள காலாங்-பாயலேபார் விரைவுச்சாலையில் விபத்து நிகழ்ந்தது என்று தங்களுக்கு வந்த தகவலை சுட்டிக்காட்டி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

காரும் டிரக்கும் இதில் மோதிக்கொண்டன. டிரக்கின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்தவரை குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

டிரக்கின் 35 வயது ஓட்டுநரும் காரின் 44 வயது ஆண் ஓட்டுநரும் இதர இரண்டு பேரும் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மூன்று குழந்தைகளும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

சமூக ஊடகங்களில் வெளியான இரண்டு நிமிடங்களுக்கு மேலான ஒரு காணொளியில், காரின் பின்புறத்தில் இருந்த வயதான பயணி, சாய்ந்து கிடந்தார்.

குறிப்புச் சொற்கள்