பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட விமானப் பயணம்

பாதுகாப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட விமானப் பயணம்

1 mins read
b9298fda-1235-4b8e-8ed7-f8e067dad7ed
பாதிக்கப்பட்ட பயணிகள் சாங்கி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குக் கூடுதல் இழப்பீடு தருவது குறித்து விமானச் சேவை திட்டமிட்டுள்ளதாகவும் யொன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது. - படம்: இணையம்

பாதுகாப்பு காரணங்களுக்காக சிங்கப்பூரிலிருந்து தென்கொரியாவின் இன்சியோன் நகருக்குச் செல்லவிருந்து டி’வே ஏர் விமானச் சேவையின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

டி’வே ஏர் தென்கொரியாவைச் சேர்ந்த குறைந்த விலை விமானச் சேவை ஆகும்.

285 பயணிகளுடன் அந்த விமானம் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதிகாலை 2.15 மணிக்கு சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக 55 நிமிடங்கள் கழித்து, அது மீண்டும் சாங்கி விமான நிலையத்துக்குத் திரும்பியது.

அந்த விமானம் பயணத்துக்குப் பொருத்தமானதல்ல என்று டி’வே ஏர் முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

அதற்குப் பதிலாக வேறொரு விமானத்தை அது தென்கொரியாவிலிருந்து சாங்கி விமான நிலையத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.

இந்த மாற்று விமானம் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு 11 மணிக்கு சாங்கி விமான நிலையத்திலிருந்து தென்கொரியாவுக்குப் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகள் சாங்கி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குக் கூடுதல் இழப்பீடு தருவது குறித்து விமானச் சேவை திட்டமிட்டுள்ளதாகவும் யொன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்