சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி செயலிகள் மூலம் மோசடிக்காரர்கள் பொதுமக்களை குறிவைத்து முதலீட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் 36 மில்லியன் வெள்ளியை பொதுமக்கள் இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆகஸ்ட் 14ஆம் தேதி காவல்துறை அறிக்கை வெளியிட்டது. அதில் 897 முதலீட்டு மோசடிகள் தொடர்பான புகார்கள் ஜூலை மாதம் முதல் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
மோசடிக்காரர்கள் இரண்டு திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றுகின்றனர்.
முதல் திட்டமானது சமூக ஊடகங்கள், டெலிகிராம் உள்ளிட்ட குறுஞ்செய்தி செயலிகளில் உள்ள குழுக்களில் பொதுமக்களை சேர்ந்துக்கொண்டு தங்களைப் பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களை ஈர்ப்பது.
இரண்டாவது திட்டம் சமூக ஊடகம் வழி பொதுமக்களிடம் நட்பாக பழகி அவர்களின் நம்பிக்கையைப்பெற்று மோசடி செய்வது.
மோசடிக்காரர்களிடம் மக்கள் அவர்களது தனிநபர் தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை கொடுக்கின்றனர். இது மேலும் பல மோசடிகளில் சிக்க வழிவகுக்கிறது.
மோசடிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பொதுமக்கள் scamalert.sg என்ற பக்கத்தைப் பார்வையிடலாம் அல்லது 1800-722-6688 என்ற மோசடிக்கு எதிரான உதவி எண்ணை அழைக்கலாம்.